Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'நீங்கள் சிங்கப்பூரரா?' என்று கேட்டவருக்கு அடி, உதை.

சிறை அதிகாரி நூர் அஸாமை, 'நீங்கள் சிங்கப்பூரரா நிரந்தரவாசியா?' என்று கேட்ட கடன் பற்று அட்டை முகவருக்குக் கிடைத்தது முகத்திலும் வயிற்றிலும் சரமாரியான அடி, உதை.

வாசிப்புநேரம் -

சிறை அதிகாரி நூர் அஸாமை, 'நீங்கள் சிங்கப்பூரரா நிரந்தரவாசியா?' என்று கேட்ட கடன் பற்று அட்டை முகவருக்குக் கிடைத்தது முகத்திலும் வயிற்றிலும் சரமாரியான அடி, உதை.

'தன்னைப் பார்த்தால் நிரந்தரவாசிப் போன்றா உள்ளது?' என்று கோபத்துடன் கேட்டுள்ளார் 31 வயது அஸாம்.

24 வயது செங் சின் லின், UOB வங்கிக் கடன் பற்று அட்டை முகவர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி, தம்பனீஸ் பேருந்து முனையத்தில் சம்பவம் நடந்தது.

தமது வேலையில், 'நீங்கள் சிங்கப்பூரரா நிரந்தரவாசியா?' என்ற கேள்வியைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான் என்றார் திரு. செங்.

சம்பவத்தில் செங்கிற்கு உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.

அஸாமின் தவறான நடவடிக்கைக்காக, $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திரு. செங்கிற்குக் காயம் விளைவித்ததற்காக, அஸாமிற்கு அதிகபட்சமாக ஈராண்டு சிறைத் தண்டனை, $5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்