Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீர்மூழ்கிகள் விபத்தில் மாட்டிக் கொள்வதைத் தடுக்கும் இணையவாசல் அறிமுகம்

சிங்கப்பூர்க் கடற்படை, நீர்மூழ்கிகள் கடலுக்கடியில் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் தடுக்கும் புதிய இணையவாசலை அறிமுகம் செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்க் கடற்படை, நீர்மூழ்கிகள் கடலுக்கடியில் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் தடுக்கும் புதிய இணையவாசலை அறிமுகம் செய்துள்ளது.

கடல்துறைத் தகவல் பகிர்வுப் பயிற்சியின்போது இணையவாசல் அறிமுகமானது.

கடலில் நீர்மூழ்கிகளுக்கும், செயல்பாட்டு நிலையங்களுக்கும் தகவல்களை அனுப்புவது புதிய இணையவாசலின் பணியாக இருக்கும்.

எண்ணெய்த் தொட்டிகளை ஏற்றிவருவது போன்ற பெரிய கப்பல்கள் தென்பட்டால் அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியம் பற்றி இணையவாசல் அவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கும்.

குறைந்தது 30 நாடுகளைச் சேர்ந்த 35க்கு மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள், கடல்துறைச் சட்ட அமலாக்க அமைப்புகள் ஆகியவை கடல்துறைப் பயிற்சியில் ஈடுபட்டன.

கடல்பகுதியில் பயங்கரவாத மிரட்டலை எதிர்கொள்வதில் நாடுகளுக்கு உதவ இத்தகைய பயிற்சிகள் உதவும் என்று^ சிங்கப்பூர்க் கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லாய் சுங் ஹான் தெரிவித்தார்.

கொள்ளை, சட்டவிரோதச் செயல், வறுமை, பூசல் காரணமாக இடம்பெயர்தல், அதிகரிக்கும் பயங்கரவாத மிரட்டல் போன்றவை கடல்துறை சந்திக்கும் சவால்கள் என்றார் அவர்.
உலகெங்கும் உள்ள கடல்துறையினரும், கடலோரக் காவல் படையினரும் அதை எதிர்கொள்வதை அவர் சுட்டினார்.

தகவல் பரிமாற்றம், அணுக்கத் தொடர்புகள் மூலமே சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்