தந்தையர்களைக் கொண்டாடும் இயக்கம்
Celebrating Fathers இயக்கம், தற்தையர்கள் எதிர்நோக்கம் சவால்களை எடுத்துசொல்லும். தந்தையர்களின் பொறுப்புகளைக் கொண்டாடும்.
Celebrating Fathers இயக்கம், தந்தையர்கள் எதிர்நோக்கும் சவால்களை எடுத்துச்சொல்லும். தந்தையர்களின் பொறுப்புகளைக் கொண்டாடும்.
ஒரு மாதம் நீடிக்கவுள்ள இயக்கம் இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கும்.
Fathering-Dads For Life நிலையமும், மீடியாகார்ப் நிறுவனமும் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்கின்றன.
இயக்கத்தின் தொடக்கமாக, Dads for Life முகாம் இடம்பெறும்.
அதன் ஓர் அங்கமாக, புதிய மீடியாகார்ப் வளாகத்தில், நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.
இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,உணவகங்கள், கடைக்காரர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
இயக்கத்தின் ஓர் அங்கமாக, 5 தந்தையர்கள், பிள்ளை வளர்ப்பு, குடும்பப் பிணைப்பு உள்ளிட்ட அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர்.
அதன் வாயிலாக, மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் துடிப்பாகப் பழகவும் நேரத்தை செலவிடவும் ஊக்குவிப்பது நோக்கம்.