Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியமாக வாழும் சிங்கப்பூரர்கள்

சிங்கப்பூரர்கள், ஏனைய பெரும்பாலான நாட்டைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழ்வதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்கள், ஏனைய பெரும்பாலான நாட்டைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழ்வதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பிறப்பினால் அதிக ஆயுளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், ஜப்பானுக்கு முதலிடம். சுவிட்ஸர்லந்துக்கு இரண்டாமிடம்.

சிங்கப்பூர் அந்தப் பட்டியலில் மூன்றாமிடத்தைப் பிடித்தது.

சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுள் 83.1 ஆண்டுகள்.

சுவிட்ஸர்லந்து நாட்டவரின் சராசரி ஆயுள் 83.4 ஆண்டுகள்.

ஜப்பானியரின் சராசரி ஆயுள் 83.7 ஆண்டுகள்.

இருப்பினும், பிறப்பினால் ஆரோக்கியமான ஆயுளைப் பெற்றிருக்கும் அம்சத்தில், சிங்கப்பூர் சிறப்பான நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

காயமோ, கொடிய நோயோ இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் ஒருவர் வாழும் ஆண்டுக் காலம், ஆரோக்கியமான ஆயுட்காலமாகக் கருதப்படுகிறது.

அந்த அடிப்படையில், இரண்டாம் நிலையிலுள்ள சிங்கப்பூரரின் ஆரோக்கியமான ஆயுட்காலம் 73.9 ஆண்டுகள்.

முதலிடத்திலுள்ள ஜப்பானியர்களுக்கு அது 74.9 ஆண்டுகள்.

மேலும், சிங்கப்பூரிலுள்ள பெண்கள், ஆண்களைக் காட்டிலும் சுமார் 6 ஆண்டுகள் கூடுதலான வாழ்நாளைக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆண்டுகள்.
ஆனால் பெண்களுக்கோ அது 86.1 ஆண்டுகள்.

நோக்கமற்ற நச்சுணவு, பாதுகாப்பற்ற குடிநீர், ஆரோக்கியமற்ற சூழல் மற்றும் பழக்கவழக்கம் காரணமாக மாண்டுபோகும் சாத்தியமும், சிங்கப்பூரர்களுக்கு மிகக் குறைவு.

உலகச் சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும் ஆரோக்கியப் புள்ளிவிவரப் பட்டியலில், 194 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்