Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"நான் பலாத்காரம் செய்யவில்லை. அச்சுறுத்த கூச்சலிட்டேன், மாது இறந்துவிட்டார் ": பங்களாதேஷ் ஊழியர்

மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பூங்காவில் மாது ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 வயது பங்காளதேஷ் கட்டுமான ஊழியர் தமது வாக்குமூலத்தை இன்று நீதிமன்றத்தில் அளித்தார்.

வாசிப்புநேரம் -

மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பூங்காவில் மாது ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 வது பங்காளதேஷ் கட்டுமான ஊழியர் தமது வாக்குமூலத்தை இன்று நீதிமன்றத்தில் அளித்தார்.

8 பிப்ரவரி 2015இல், தாம் 40 வயது சீன நாட்டுப் பெண்ணைப் பூங்காவில் பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், அவரை தாம் தொடவும் இல்லை, பலாத்காரமும் செய்யவில்லை என்றார் ஊழியர்.

மாதை அச்சுறுத்தும் நோக்கத்துடன் மட்டுமே தாம் கத்தி, கூச்சலிட்டதாக அவர் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, மாது பயத்தில் இறந்துவிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

அந்த மாதுவிடம் தாம் பேசவும் இல்லை, தம்மிடம் கத்தியும் இல்லை என்றார் அவர்.

ஆனால் அந்தப் பெண் மரணமடையவில்லை. பங்களாதேஷ் ஊழியர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று வாக்குமூலங்களைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

வழக்கு குறித்த தீர்ப்பை நாளை அறிவிக்கவிருப்பதாய் நீதிபதி  கூறினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்