Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு 2017 முதல் காலாண்டில் $138 மி. நட்டம்

இவ்வாண்டு முதல் காலாண்டில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குக் கடும் போட்டிக் காரணமாக, 138 மில்லியன் வெள்ளி நட்டம் ஏற்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

இவ்வாண்டு முதல் காலாண்டில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குக் கடும் போட்டிக் காரணமாக, 138 மில்லியன் வெள்ளி நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில் நிறுவனம் 225 மில்லியன் வெள்ளி லாபம் ஈட்டியது.

நிறுவனத்தின் நான்காம் காலண்டு வருவாய், 3.7 பில்லியன் வெள்ளியாக இருந்தது.

பயணங்கள் அதிகமாக இருந்திருந்தாலும், பயணிகளிடமிருந்து ஈட்டப்பட்ட வருவாய் 17 மில்லியன் வெள்ளி குறைந்தது.

ஆக மொத்தத்தில், இந்த நட்டம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயைப் பாதித்தது.

2016/17 பொருளியல் ஆண்டுக்கான மொத்த வருவாய் 50 விழுக்காட்டுக்கும் மேல் வீழ்ந்தது.

இதிலிருந்து மீளவும், முன்னேறவும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சொன்னது.

எரிபொருளை அதிகம் பயன்படுத்தாத விமானங்களின் எண்ணிக்கைகயைக் கூட்டவும், இன்னும் கூடுதல் இடங்களுக்குச் சேவையளிக்கவும் அது திட்டம் கொண்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்