Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழந்தைப்பேறு விகிதம் மாறாமல் இருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தேங்கிவிடலாம்

குழந்தைப்பேறு விதிகம் தற்போதுள்ள அளவில் தொடர்ந்து நீடித்தால், சிங்கப்பூரின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2060ஆம் ஆண்டு வரை 1.5 விழுக்காடு குறையும்.  கொள்கை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

2080ஆம் ஆண்டுக்குள், ஒவ்வொரு 100 சிங்கப்பூரர்களுக்கு 91 வயதான குடிமக்கள் இருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் முன்னுரைத்தனர். இந்த விகிதம் 1980ஆம் ஆண்டில் இருந்த விகிதத்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம்.

சிங்கப்பூரின் மக்கள்தொகை தொடர்பான கொள்கைகளில் குடிநுழைவு ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்துள்ளது. ஆயினும் குடியேறிகள் தொடர்பான கொள்கைகள் கவனமாகக் கையாளப்படவேண்டும் என்றும் மூப்படையும் சமுதாயப் பிரச்சினைக்கு அது மட்டுமே தீர்வல்ல என்றும் அதிகாரிகள் புரிந்துகொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டினர்.

சராசரி ஆயுட்காலம் அதிகரித்திருப்பதால், நோய்வாய்ப்பட்டு இருக்கும் காலத்தைக் குறைப்பதற்கு வழிசெய்யும் சுகாதாரக் கொள்கைகள் அவசியம் என்று அவர்கள் சொல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்