Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாகன நிறுத்துமிட அதிகாரியைத் திட்டிய பேருந்து ஓட்டுநர்- காணொளியின் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை

பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் அமலாக்க அதிகாரியைத் திட்டி, அவரைக் குத்தப் போவதாக மிரட்டுவதைக் காட்டும் காணொளி ஒன்றின் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
வாகன நிறுத்துமிட அதிகாரியைத் திட்டிய பேருந்து ஓட்டுநர்- காணொளியின் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை

தகாத வார்த்தைகளால் வாகன நிறுத்துமிட அதிகாரியைத் திட்டிய பேருந்து ஓட்டுநர். (படம்: Facebook/Abdul Aleem Mohamed Saffrollahkahn)

சிங்கப்பூர்: பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் அமலாக்க அதிகாரியைத் திட்டி, அவரைக் குத்தப் போவதாக மிரட்டுவதைக் காட்டும் காணொளி ஒன்றின் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்க அதிகாரி, நிலப் போக்குவரவு ஆணையத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டதாக ஆணையப் பேச்சாளர் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தார்.

பேருந்தை நகர்த்தும்படி ஓட்டுநரிடம் அமலாக்க அதிகாரி கேட்டுக்கொண்டதைக் காணொளி காட்டியது.

மஞ்சள் நிறத்திலுள்ள இரட்டை zig zag கோடுகளில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து விதிமுறைகளின்படி, அத்தகையக் கோடுகளில் வாகனங்களை நிறுத்துவது குற்றம்.

அதிகாரி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நகர்த்தியதாகத் தோன்றுகிறது.
ஆனால் சிறிது நேரத்தில் பேருந்தை நிறுத்தி, வெளியில் வந்து அமலாக்க அதிகாரியை முகத்தில் குத்தப் போவதாக மிரட்டுவதோடு தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். அதிகாரி தாம் தமது வேலையைச் செய்வதாக பதிலளிக்கிறார்.

காணொளி எப்படி எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்