Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாதவிடாய் நிறுத்தத்தை வேலையிடத்தில் இயல்பான ஒன்றாக ஆக்க முதலாளிகளுக்கு வலியுறுத்தல்

மாதவிலக்கு முடிவுறும் போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்த கருத்துப் பரிமாற்றங்களை வேலையிடத்தில் இயல்பாக்க வேண்டும். முதலாளிகள் அதற்கு வகை செய்யவேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
மாதவிடாய் நிறுத்தத்தை வேலையிடத்தில் இயல்பான ஒன்றாக ஆக்க முதலாளிகளுக்கு வலியுறுத்தல்

சிங்கப்பூர் நகரக்காட்சி. (படம்: Reuters)

மாதவிலக்கு முடிவுறும் போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்த கருத்துப் பரிமாற்றங்களை வேலையிடத்தில் இயல்பாக்க வேண்டும். முதலாளிகள் அதற்கு வகை செய்யவேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆய்வு ஒன்றில், மாதவிடாய் நிறுத்தம் சார்ந்த அறிகுறிகளால் அவதியுறுவதை முதலாளிகளிடம் தாங்கள் கூறவில்லை என்று 70 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

பொதுவாக 45 வயதிலிருந்து 55 வயதிற்குட்பட்ட பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளால் அவதியுறுகின்றனர். அப்போது அவர்கள் தூக்கமின்மை, பதற்றம், ஞாபக மறதி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
முதலாளிகள் அதிகச் செலவிலான மாற்றங்களைச் செய்யாவிட்டாலும், நீக்குப்போக்கான வேலை நேரத்தை அனுமதிப்பது, மேசையில் காற்றாடியை வைப்பது போன்ற மாற்றங்களைச் செய்வது உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மூப்படையும் மக்கட்தொகையின் காரணமாக வேலையிடத்தில் மாதவிடாய் நிறுத்தத்தால் அவதியுறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் அவர்களைக் கவனிக்கும் அவசியமும் அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்