Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டில் பயன்படுத்தும் கருவிகளில் எவற்றை மறுசுழற்சி செய்யலாம்?

சிங்கப்பூரில் 10இல் 6 பேர் தங்கள் வீடுகளில் பயன்டுத்திய பழைய தொலைக்காட்சிப் பெட்டிகள், அச்சு இயந்திரங்கள், கணினிகள், ஆகியவற்றை அப்படியே வீசியெறிவதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
வீட்டில் பயன்படுத்தும் கருவிகளில் எவற்றை மறுசுழற்சி செய்யலாம்?

(படம்: Reuters/Arnd Wiegmann)

சிங்கப்பூரில் 10இல் 6 பேர் தங்கள் வீடுகளில் பயன்டுத்திய பழைய தொலைக்காட்சிப் பெட்டிகள், அச்சு இயந்திரங்கள், கணினிகள், ஆகியவற்றை அப்படியே வீசியெறிவதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

அவற்றை எவ்வாறு மறுசுழற்சிக்கு உட்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்குத் தெரியாததே அதற்குக் காரணம்.

சிங்கப்பூரில் மின்னியல் கழிவுப் பொருட்களைக் கையாள்வது குறித்து தேசியச் சுற்றுப்புற அமைப்பு மேற்கொண்ட கருத்தாய்வில் அது பற்றித் தெரிய வந்தது.

ஒவ்வொர் ஆண்டும் சிங்கப்பூர் 60,000 டன்னுக்கும் மேற்பட்ட மின்னியல் கழிவுப் பொருட்களை உருவாக்குகிறது.

அது 220 ஏர்பஸ் A380 விமானங்களின் எடைக்கு நிகரானது.

ஒவ்வொரு சிங்கப்பூரரும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 11 கிலோகிராம் மின்னியல் கழிவுப் பொருட்களை வீசியெறிகிறார்.

அதிக மதிப்புள்ள திறன்பேசிகள் போன்ற பொருட்களை மட்டுமே மக்கள் மறுவிற்பனை அல்லது பண்டமாற்று செய்கின்றனர்.

மற்ற பொருட்கள் அப்படியே வீசியெறியப்படுகின்றன.

மின்னியல் கழிவில் சுமார் 70 விழுக்காடு, பழைய சலவை இயந்திரங்கள், குளிர் சாதன இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சார்ந்தவை.

6 விழுக்காட்டு மின்னியல் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கு உகந்த வகையில் அவற்றைக் கையாளும் கட்டமைப்பு குறித்து ஆராயப்படுவதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம், அது குறித்த கருத்துகள் பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்