Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீடியாகார்ப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் திரு நியாம் சியாங் மெங்

மீடியாகார்ப் நிறுவனம் அதன் புதிய தலைவராக திரு நியாம் சியாங் மெங்கை  அறிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் திரு நியாம் சியாங் மெங்

(படம்: Channel NewsAsia)

மீடியாகார்ப் நிறுவனம் அதன் புதிய தலைவராக திரு நியாம் சியாங் மெங்கை அறிவித்துள்ளது. 59-வயது திரு நியாம் ஏப்ரல் 21ஆம் தேதி முதல், தலைவர் பதவியை ஏற்பார். நிறுவனத்தின் பொது ஒலிபரப்புச் சேவைக் குழுவின் தலைவராகவும் செயற்குழு, நியமன, சம்பளக் குழு உறுப்பினராகவும் அவர் உள்ளார்.

நவம்பர் 2016இல் மீடியாகார்ப் வாரியத்தின் இயக்குநராகத் திரு நியாம் நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் தலைவராகவும் உள்நாட்டு வருவாய் ஆணைய இயக்குநர் குழு உறுப்பினராகவும் திரு நியாம் பொறுப்பு வகிக்கிறார்.

பல்லாண்டு காலமாகப் பொதுச் சேவையில் பணியாற்றிய திரு நியாம், மீடியாகார்ப்பின் தலைமைப் பதவியை ஏற்பதில் பெருமிதம் அடைவதாகக் கூறியுள்ளார். மீடியாகார்ப்பின் ஊழியர்களுடனும் நிறுவனத்தின் பங்காளிகளுடனும் பணிபுரிவதை மிகவும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

தற்போதைய தலைவர் திரு எர்னஸ்ட் வோங் நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்கிற்கும் வழங்கிய வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார் திரு நியாம். மின்னிலக்க யுகத்தில் நிறுவனம் வளர்ச்சியடைவதற்குத் திரு வோங் உறுதுணையாக இருந்ததாய் அவர் கூறினார்.

72- வயது திரு வோங் ஏப்ரல் 20ஆம் தேதி மீடியாகார்ப்பின் தலைவராக ஈராண்டு காலத் தவணையை முடித்துக்கொள்வார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்