Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் ஜப்பானிய விமான நிலையத்தில் சிங்கப்பூரர் கைது

ஒசாக்காவின் கன்சாய் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவரின் பயணப்பெட்டியில் சுமார் 3 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் ஜப்பானிய விமான நிலையத்தில் சிங்கப்பூரர் கைது

(படம்: Channel NewsAsia)

ஒசாக்கா, ஜப்பான்: ஒசாக்காவின் கன்சாய் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவரின் பயணப்பெட்டியில் சுமார் 3 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானிய நாளிதழான சான்க்கேய் ஷிம்புன் அந்தத் தகவலை புதன்கிழமை (ஜனவரி 17) வெளியிட்டது

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் சுமார் $2.3 மில்லியன் பெறுமானமுள்ளது.

பக்தியார் அவால் என்று அடையாளம் காணப்பட்ட 37வயது ஆடவர், துப்புரவாளராகப் பணிபுரிந்து வருகிறார். டிசம்பர் 21ஆம் தேதி இந்தியாவிலிருந்து கன்சாய் விமான நிலையத்திற்கு அவர் சென்றுசேர்ந்தார்.

சட்டவிரோதமான பொருட்கள் தனது பயணப்பெட்டியில் இருப்பதை அறிந்திருந்ததாகக் கூறிய அவர், அவை போதைப்பொருட்கள் என்பதை அறிந்திருக்கவில்லை என்றார். நண்பர் ஒருவர் பயணப்பெட்டியை ஒசாக்காவில் உள்ள ஒரு வீட்டில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டதாக அவால் தெரிவித்தார்.

விசாரணை தொடர்வதாக ஜப்பானியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்