Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோவில் குட்டி கம்பத்து வீடுகள்

தேசியக் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் Arts in Your Neighbourhood நிகழ்ச்சி, இம்முறை அங் மோ கியோ வட்டாரவாசிகளை நாடிவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

தேசியக் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் Arts in Your Neighbourhood நிகழ்ச்சி, இம்முறை அங் மோ கியோ வட்டாரவாசிகளை நாடிவந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச், நவம்பர் மாதங்களில் இடம்பெறுகிறது "கலை - உங்கள் அக்கம்பக்கத்தில்" நிகழ்ச்சி.

பல்வேறு அக்கம்பக்கக் குடியிருப்புப் பேட்டைகளுக்கு கலை அனுபவத்தைக் கொண்டுசேர்ப்பது அதன் இலக்கு.

அங் மோ கியோ நகர மன்ற அலுவலகத்துக்கு அருகில் உள்ள Teck Ghee Court சந்தை-உணவங்காடி நிலையத்தில் அது இடம்பெறுகிறது.

கடந்த வார இறுதிகளில் குடியிருப்பாளர்களுக்காகச் சில பயிலரங்குகளும், நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Bishan-Ang Mo Kio பூங்காவில், THAUMATROPE பொம்மை விளையாட்டை உருவாக்கும் பயிலரங்கு இடம்பெற்றது.

குடும்பத்துடன் ஈடுபட வாய்ப்பளித்த நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் தங்களுடைய தயாரிப்பை மகிழ்ச்சியோடு வீட்டுக்கு எடுத்துச்சென்றனர்.

பிளாஸ்டிக் குழாய்கள், மறுபயனீட்டுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு சிற்பம் உருவாக்கும் பயிலரங்கும் நடத்தப்பட்டது.

அடுத்த வார இறுதியில், Teck Ghee Court சந்தை-உணவங்காடி நிலையத்தில், "Reminiscing Old Ang Mo Kio" கலைப்படைப்பு குறித்து அதன் படைப்பாளரிடம் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

இத்தகைய ஏற்பாடு தங்களின் கடந்தகால நினைவுகளை மீட்டெடுப்பதாகக் கூறினார் குடியிருப்பாளர் திரு. ராஜா, திருவாட்டி மணிமேகலை.


(படங்கள்:  மோகனா பிள்ளை)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்