Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்சக்தித் துறையில் தடம்பதிக்கவிருக்கும் ஸ்டார்ஹப்

சிங்கப்பூர் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்டார்ஹப் (StarHub), மின்சக்தித் துறையில் தடம்பதிக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
மின்சக்தித் துறையில் தடம்பதிக்கவிருக்கும் ஸ்டார்ஹப்

(படம்: Starhub)

சிங்கப்பூர் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்டார்ஹப் (StarHub), மின்சக்தித் துறையில் தடம்பதிக்கவிருக்கிறது.

சூரிய சக்தி நிறுவனமான சன்சீப்புடன் (Sunseap) இணைந்து அடுத்த மாதம் ஜூரோங் மின் சந்தையில், மின்சக்தி விற்பனையை அது தொடங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு, Green Life, Green Save என இருவகையான சந்தாத் திட்டங்களை அவை கூட்டாக அறிமுகம் செய்யும்.

Green Life திட்டம் 100 விழுக்காடு பசுமைத் திட்டம்.

வாடிக்கையாளர்கள் அதன் மூலம், முழுவதும் சூரியசக்திக் கட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் பெறலாம். வழக்கமான மின் கட்டணங்கள் அதற்கும் பொருந்தும்.

Green Save திட்டம், 5 விழுக்காட்டுப் பசுமைத் திட்டம். அதன்மூலம் வாடிக்கையாளர்கள் வழக்கமான கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு கழிவுபெறலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்