Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இல்லப் பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச $15,000 காப்புறுதித் தொகை பொதுமானதே : சாம் டான்

இல்லப் பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச $15,000 மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 97 விழுக்காட்டினரின் சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்தப் போதுமானதாயிருந்தது.

வாசிப்புநேரம் -
இல்லப் பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச $15,000 காப்புறுதித் தொகை பொதுமானதே : சாம் டான்

(படம்: TODAY)

இல்லப் பணிப்பெண்களுக்கான குறைந்தபட்ச $15,000 மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 97 விழுக்காட்டினரின் சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்தப் போதுமானதாயிருந்தது.

மனிதவளத் துணை அமைச்சர் சாம் டான் நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார்.

எஞ்சிய 3 விழுக்காட்டினருக்கு மட்டுமே அதற்கும் அதிகமான தொகையைக் கட்டணமாகச் செலுத்த நேர்ந்தது.

கடந்த மூவாண்டில் சுமார் ஆயிரத்து-தொள்ளாயிரம் பேரில் 170 பேருக்கு மட்டுமே மருத்துவக் கட்டணம் $15,000 வெள்ளியைத் தாண்டியதாக, திரு. சாம் டான் கூறினார்.

பணிப்பெண்களுக்கான மருத்துவமனைக் கட்டணம் எதிர்பாரா விதமாக உயர்வதைச் சமாளிக்க முதலாளிக்கு உதவும் வண்ணம், மனிதவள அமைச்சு கொள்கை மேம்பாடு குறித்துப் பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

காப்பீட்டுத் தொகையை உயர்த்தினால், முதலாளிகள் செலுத்தவேண்டிய சந்தாத் தொகையும் உயரும் என்பதை அமைச்சு கவனத்தில் கொள்வதாகத் திரு. டான் கூறினார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்