Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவர்களை அடையாளங்காண ஆசியர்களுக்குப் பயிற்சி

சிங்கப்பூரின் பொதுப் பள்ளிகளில், மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவர்களை அடையாளங்காண ஆசியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவர்களை அடையாளங்காண ஆசியர்களுக்குப் பயிற்சி

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூரின் பொதுப் பள்ளிகளில், மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவர்களை அடையாளங்காண ஆசியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க ஆசிரியர்கள் உள்ளதாக மூத்த கல்வித் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இன்று (மார்ச் 19) நாடளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், அப்படிப்பட்ட மாணவர்களை, தொடர்ந்து கண்காணிப்பது சவால் மிக்க பணி என்றார் அமைச்சர்.

மாணவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மனநலக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கல்வி அமைச்சு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தேவைப்படும்போது, மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளி ஆலோசகர்களிடம் அனுப்பி வைப்பார்கள்.

மேம்பட்ட அணுகுமுறை தேவையென்றால் மாணவர்கள்
மருத்துவ நிபுணர்களிடம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்