Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நல்லாசிரியர் விருதுகள் 2018 -உங்களை கவர்ந்த தமிழாசிரியரை முன்மொழியுங்கள்

சிங்கப்பூரில், இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு மிகவும் ஊக்கமளித்த தமிழாசிரியர்களை விருதுக்கு முன்மொழியலாம்.

நாளை முதல் மே மாதம் 18ஆம் தேதிவரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.

தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, புகுமுகக் கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் விருதுக்குத் தகுதிபெறுவர்.

தமிழ் கற்றல், கற்பித்தலில் மாணவர்களின் மொழி ஆர்வத்தைத் தூண்ட, குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிய தமிழாசிரியர்களை அங்கீகரிக்கும் வண்ணம், 2002ஆம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தமிழ் முரசு நாளிதழ், தமிழ் மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து அந்த விருதினை வழங்குகின்றன.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட, அவர்கள் வாழ்வில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

விண்ணப்பப் படிவங்கள் சிங்கப்பூர் பள்ளிகள் அனைத்திலும் கிடைக்கும்.

இணையம் வழி விண்ணப்பிக்க தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, தமிழ் முரசு ஆகியவற்றின் இணையத் தளங்களை நாடலாம்.

2002ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் சுமார் 180 தமிழாசிரியர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 6 பிரிவுகளில் விருது வழங்கப்படும்.

நல்லாசிரியர் விருதுகளுடன் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதும், வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்படவிருக்கின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்