Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளிகளில் ஆரோக்கிய உணவுத் திட்டம்: இவ்வாண்டுக்குள் செயல்படுத்தப்படும்

பள்ளிகளில் இந்த ஆண்டுக்குள், ஆரோக்கிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வாசிப்புநேரம் -

பள்ளிகளில் இந்த ஆண்டுக்குள், ஆரோக்கிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன் மூலம், அனைத்துப் பள்ளிகளிலும் ஆரோக்கியமான உணவு வகைகளும், பானங்களும் விற்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

தற்போது அந்தத் திட்டத்தில் பங்கேற்கும் ஒரு பள்ளி எவ்வாறு செயல்படுகிறது?

ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளியின் சிற்றுண்டிச்சாலை.

அங்கே உள்ள அனைத்து உணவு விற்பனைக் கடைகளும் ஒரு நாள் மட்டும் பிரபல சமையல் வல்லுநர் ஜெமி ஆலிவரின் குழுவால் நடத்தப்படுகின்றன.

இது அவருடைய உணவுப் புரட்சியின் ஒரு பகுதியாகும்.

இதன் மூலம், ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளைப் பற்றி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது நோக்கம்.

பள்ளிகளும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், இளம் வயதிலேயே தொடங்க வேண்டும் என்று ஊக்குவிக்கின்றன.

ஆரோக்கிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளி, தினந்தோறும் ஆரோக்கியமான உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

அது மட்டும் அல்ல.

ஆண்டு முழுவதும், பள்ளி பல தொடர் நிகழ்வுகளை மாணவர்களுக்காக நடத்துகிறது.

அதன் மூலம் மாணவர்கள் சரியான உணவு வகைகளைத் தெரிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஆரோக்கியமான உணவு வாரமும் பள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.

அந்த ஒரு வாரத்தில் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகள், விளையாட்டுகள், யோகா பட்டறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அந்த நடவடிக்கைகளில் பங்கேற்க பெற்றோரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்