Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலி அவசரத் தொலைபேசி எண்: காவல்துறை எச்சரிக்கை

சிங்கப்பூர்: போலியான காவல்துறை அவசரத் தொலைபேசி எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் குறித்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: போலியான காவல்துறை அவசரத் தொலைபேசி எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் குறித்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.

அத்தகைய அழைப்புகள் குறித்துப்  பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காவல்துறை அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உண்மையான தொலைபேசி எண்ணை மறைத்துப் போலியான எண்ணைக் காட்டுவதற்கு ID spoofing தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 

காவல் துறை அவசர உதவி எண்ணிலிருந்து அழைப்புவரும்போது அவர்களுடைய தொலைபேசியில்
"1800-255-0000" என்ற எண் தோன்றாது எனச் சிங்கப்பூர்க் காவல்துறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. 

அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களிலிருந்து அழைப்பு வரும்போது அதைத் தவிர்க்க வேண்டும் எனப் பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துத் தங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் இணையத்தில் தகவலளிக்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டது.

அவசரமாக உதவி தேவைப்பட்டால், 999 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அது நினைவூட்டியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்