Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

1MDB விசாரணையில் மலேசியாவுக்கு உதவத் தயார் : சிங்கப்பூர் அதிகாரிகள்

அமெரிக்கா, சுவிட்ஸர்லந்து உள்ளிட்ட 6 நாடுகள் 1MDBஇன் தொடர்பில் விசாரணை நடத்துகின்றன.

வாசிப்புநேரம் -
1MDB விசாரணையில் மலேசியாவுக்கு உதவத் தயார் : சிங்கப்பூர் அதிகாரிகள்

(படம்: Reuters/Olivia Harris)

மலேசியாவில் 1MDB தொடர்பில் நடக்கும் விசாரணைக்குக் கைகொடுக்கத் தயாராய் இருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும், வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவும் தெரிவித்துள்ளன.

கடந்த காலத்தில் அந்த விவகாரம் குறித்த தகவல்களுக்கான கோரிக்கைகளின் தொடர்பில் சிங்கப்பூர் அதிகாரிகள் தங்களின் ஆதரவை அளித்திருப்பதாக அமைப்புகள் கூறின.

நிதி அமைப்புகள், தனிநபர்கள் என 1MDB நிதி தொடர்பில் சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட தரப்புகள்மீது சிங்கப்பூர் துரித நடவடிக்கை எடுத்துள்ளதை அதிகாரிகள் சுட்டினர்.

அந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என்று மலேசியாவின் புதிய பிரதமர் மஹாதீர் முகமது கூறியிருக்கிறார்.

1MDB கலைக்கப்படும் வரை அதன் ஆலோசனைக் குழுத் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று கூறிவருகிறார்.

அமெரிக்கா, சுவிட்ஸர்லந்து உள்ளிட்ட 6 நாடுகள் 1MDBஇன் தொடர்பில் விசாரணை நடத்துகின்றன.

சிங்கப்பூரில் சில வங்கியாளர்கள் அதன் தொடர்பில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்