Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் வெஸ்ட் வீட்டில் துப்பாக்கி, தோட்டா கண்டுபிடிப்பு - இருவர் மீது குற்றச்சாட்டு

ஜூரோங் வெஸ்ட்டில் சட்டவிரோதமாக ரவை நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததன் தொடர்பில், இருவரின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை.

வாசிப்புநேரம் -
ஜூரோங் வெஸ்ட் வீட்டில் துப்பாக்கி, தோட்டா கண்டுபிடிப்பு - இருவர் மீது குற்றச்சாட்டு

படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

ஜூரோங் வெஸ்ட்டில் சட்டவிரோதமாக ரவை நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததன் தொடர்பில், இருவரின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை.

ஆயுதக் குற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக 24 வயது முகமது அக்ராம் அப்துல் அஸாஸின்மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 72-இல் அமைந்துள்ள புளோக் 731இன் மூன்றாம் தளத்தில் Shooters Sea Hawk ரகக் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதனை சட்டவிரோதமாய் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஆயுதங்களை வைத்திருந்த நபருக்கு உடந்தையாக இருந்த 25 வயது அமீருல் அஸ்ராவ் முகமது ஜுனுஸின்மீது ஒரு குற்றம் சுமத்தப்பட்டது.

சட்டவிரோதமாக ஆயுதங்களை ஒருவர் வைத்திருந்தால் 5 முதல் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்