Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

13 வயது இல்லப் பணிப்பெண்களைக் கொண்டு வந்ததாக 2 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

மியன்மாரிலிருந்து 13 வயதுப் பெண்களை இல்லப்பணிப் பெண்களாக வேலை செய்ய சிங்கப்பூருக்குக் கொண்டு வந்ததாக இரண்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
13 வயது இல்லப் பணிப்பெண்களைக் கொண்டு வந்ததாக 2 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

கோப்புப் படம்: Channel NewsAsia

மியன்மாரிலிருந்து 13 வயதுப் பெண்களை இல்லப்பணிப் பெண்களாக வேலை செய்ய சிங்கப்பூருக்குக் கொண்டு வந்ததாக இரண்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் முகவர் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு 6 மாதச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

மனிதவள அமைச்சு, நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யக்கூடும். நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்பு முன்பணத்தையும் இழக்க நேரிடலாம்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்வதற்கான குறைந்தபட்ச வயது 23.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்