Images
  • Market
    படம்: Calvin Oh, Google Street View

ஹேக் ரோடு் சந்தை, உணவு நிலையம், சொங் பாங் சந்தை 2 வாரங்களுக்கு மூடப்படும்

ஹேக் ரோடு (Haig Road) சந்தை, உணவு நிலையத்திலும், சொங் பாங் (Chong Pang) சந்தையிலும் 35 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை 2 வாரங்களுக்கு மூடப்படுகின்றன.

இன்றிலிருந்து (ஜூலை 21) ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை அந்த இடங்கள் மூடப்பட்டிருக்கும்.

பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் ஹேக் ரோடு (Haig Road) சந்தை, உணவு நிலையத்திற்குத் தொடர்புடையவர்கள்.

மற்ற 10 பேர் சொங் பாங் (Chong Pang) சந்தைக்குத் தொடர்புடையவர்கள்.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்திற்குச் சென்று வந்த மீன் வியாபாரிகள் மூலம் அந்த இடங்களில் நோய்த்தொற்று பரவியதாக சுகாதார அமைச்சு நம்புகிறது.

இதற்கு முன்னர் அங் மோ கியோவில் உள்ள சொங் பூன் (Chong Boon)சந்தை, உணவு நிலையம் ஜூலை 18ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் முதல் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் சந்தை, உணவு நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

Club MX Ktv நிலையத்தில் கிருமித்தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

அந்த நிலையத்திற்குச் சென்றிருந்தவர்கள், உடல் நலத்தை அணுக்கமாகக் கவனிக்குமாறும், மற்றவர்களுடன் சமூக அளவில் கூட வேண்டாம் என்றும் அமைச்சு அறிவுறுத்தியது.
 

Top