Images
  • gaming
    படம்: Razer

தென்கிழக்காசிய விளையாட்டு 2019: மின்-விளையாட்டில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் 20 போட்டியாளர்கள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிலிப்பீன்ஸில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரை மின்-விளையாட்டில் பிரதிநிதித்து 20 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

Arena of Valor, DOTA 2, StarCraft II, Tekken 7, Heartstone ,Mobile Legends: Bang Bang ஆகிய மின்-விளையாட்டுப் பிரிவுகளில் வெற்றிபெறுவோருக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

அனைத்துலக ஒலிம்பிக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டு, பதக்கம் வெல்லக்கூடிய போட்டியில் மின்-விளையாட்டு இடம்பெறுவது இதுவே முதல்முறை.

பிலிப்பீன்ஸின் பல்வேறு நகரங்களில் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும்.


Top