Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிடோக்கில் சைக்கிளோட்டிகளுக்கு தனிப் பாதைகள்

பிடோக்கில் சைக்கிளோட்டிகளுக்கு தனிப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் இனி பேட்டையைச் சுற்றி பாதுகாப்பாக, வசதியாகப் பயணம் செய்யலாம்.

வாசிப்புநேரம் -

பிடோக்கில் சைக்கிளோட்டிகளுக்கு தனிப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் இனி பேட்டையைச் சுற்றி பாதுகாப்பாக, வசதியாகப் பயணம் செய்யலாம்.

ஈஸ்ட் கோஸ்ட் (East Coast) குழுத்தொகுதி, ஃபெங்ஷான் தனித்தொகுதி ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளோட்டப் பாதைகளை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தனர்.

பாதைகளின் நீளம் 13 கிலோமீட்டர்.

குடியிருப்பாளர்கள் சைக்கிள் அல்லது தனிநபர் நடமாட்டச் சாதனங்களை அந்தப் பாதைகளில் ஓட்டிச் செல்லலாம்.

சென்ற ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் இடையே 30 விபத்துச் சம்பவங்கள் ஏற்பட்டன.

சாதாரண நடைபாதைகளிலிருந்து சைக்கிளோட்டப் பாதைகள் தனியாகத் தென்பட அவை ஒருவகை சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

பிடோக் வட்டாரத்துக்கான அரசாங்கத்தின் புதுப்பிப்புத் திட்டங்களின் ஓர் அங்கம் புதிய சைக்கிளோட்டப் பாதைகள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்