Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சோதனைச் சாவடிகளில் பொருள், சேவை வரியைச் செலுத்துவதில் ஏற்படும் சிரமம்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலையில் வழக்கத்தைவிட அதிகமான வாகன நெரிசல் காணப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலையில் வழக்கத்தைவிட அதிகமான வாகன நெரிசல் காணப்பட்டது.

மிகமெதுவாக நகர்ந்த வாகன வரிசையில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் நீண்டு நின்றுகொண்டிருந்தன.

வாகன வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவர் சேனல் நியூஸ் ஏஷியா நிருபர் அமிர் யூசோஃப்.
ஜொகூர் பாருவில் வாங்கப்படும் பொருட்களுக்குப் பொருள், சேவை வரியைக் கட்டுவதற்கான நேரம் 20 நிமிடங்கள் வரை நீடிப்பதாய் அவர் கூறினார்.

ஜொகூர் பாருவில் பொருள் வாங்கும் சிங்கப்பூரர்கள் பலர், சோதனைச் சாவடியில் காத்திருந்து பொருள், சேவை வரியைச் செலுத்துவது சிரமமாக இருப்பதாய்த் தம்மிடம் கூறியதாகத் திரு அமிர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்படும் அன்பளிப்புகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 7 விழுக்காட்டு பொருள், சேவை வரி கட்டப்படவேண்டும் என்று சிங்கப்பூர்ச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

48 மணி நேரத்திற்கு மேல் வெளிநாடுகளில் இருக்கும் சுற்றுப்பயணிகளுக்கு 600 வெள்ளி மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது. 48 மணி நேரத்திற்குக் குறைவாக இருப்போருக்கு அது 150 வெள்ளியாக இருக்கும்.

பொருள், சேவை வரியைச் சிரமமின்றி கட்டுவதற்கு Customs @SG செயலியைப் பயணிகள் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர்ச் சுங்கத்துறையும் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையமும் தெரிவித்தன. அத்தகைய செயலி ஒன்று இருப்பதே பல சிங்கப்பூரர்களுக்குத் தெரியவில்லை என்று சேனல்நியூஸ்ஏஷியா அறிகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்