Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீடியாகார்ப் நிறுவனத்தின் Okto ஒளிவழி - பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தது

மீடியாகார்ப் நிறுவனத்தின் Okto ஒளிவழி கடந்த 2 ஆண்டுகளில் சிறுபிள்ளைகளுக்காக அறிமுகம் செய்த நிகழ்ச்சிகள்மூலம் அதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தது.

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் நிறுவனத்தின் Okto ஒளிவழி - பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தது

படம்: Channel NewsAsia

மீடியாகார்ப் நிறுவனத்தின் Okto ஒளிவழி கடந்த 2 ஆண்டுகளில் சிறுபிள்ளைகளுக்காக அறிமுகம் செய்த நிகழ்ச்சிகள்மூலம் அதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தது. ஒவ்வொரு வாரமும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 150 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார் Okto ஒளிவழியை நாடுகின்றனர். ஒளிவழியின் சில படைப்புகள் வெளிநாடுகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.

இங்குள்ள ரசிகர்களுக்கு தொடர்ந்து தரமான சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்குவது குறித்து மீடியாகார்ப் நிறுவனத்தின் தலைமை வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி டெப்ரா சூன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிறுவர்களை ஈர்க்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாக Okto ஒளிவழி Kids Fiesta எனும் கேளிக்கை விழாவை முதல்முறையாக நடத்துகிறது.
அதில் Okto ஒளிவழியின் பிரபல கதாபாத்திரங்களைச் சந்திக்க சிறுவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதோடு அவர்கள் விளையாட்டுகளிலும் மற்ற நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டனர்.
விழா சன்டெக் (Suntec) சிங்கப்பூர் மாநாட்டு நிலையத்தில் நாளை வரை நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்