Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தகாதச் செயலில் ஈடுபட்டதாக நன்யாங் பல்கலை மாணவர் கைது

இளையர் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டதாக அளித்த புகாரைத் தொடர்ந்து நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இளையர் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டதாக அளித்த புகாரைத் தொடர்ந்து நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆய்வு ஒன்றில் கலந்துகொள்வதாக நினைத்துப் பங்கேற்றபோது, தான் மானபங்கம் செய்யப்பட்டதாக அவர் புகார் அளித்தார்.
அந்த 25 வயது சிங்கப்பூரர் இன்று கைது செய்யப்பட்டதாகச் சேனல் நியூஸ் ஏஷியா அறிகிறது.

'கம்ட்ரீ' (Gumtree) இணையத்தளத்தில் ஆய்வுக்கான விளம்பரத்திற்குத் தாம் பதிலளித்ததாக அந்த 17 வயது இளையர் கூறியதாக நன்யாங் பல்கலையின் ' நன்யாங் க்ரானிக்கல்'(Nanyang Chronicle) சஞ்சிகை தெரிவித்தது.

உடல் தொடர்பான ஆய்வு ஒன்றுக்குப் பங்கேற்பாளர்கள் தேவைப்படுவதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது. அதில் பங்குபெறுவோருக்கு, ஒரு மணி நேரத்திற்கு 25 வெள்ளி வழங்கப்படும் என்று விளம்பரம் குறிப்பிட்டது.

25 வயது ஆடவர், தன்னை அவரது தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றதாக இளையர் ' நன்யாங் க்ரானிக்கல்' சஞ்சிகையிடம் தெரிவித்தார். அங்கு அந்த ஆடவர் தன்னை மானபங்கம் செய்ததாக இளையர் கூறினார். சம்பவத்திற்கு மறுநாள் புகார் செய்ததாக இளையர் கூறினார். விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்