Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழர் பேரவை : மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி

சிங்கப்பூரில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

2000-ஆம் ஆண்டு முதல் தமிழர் பேரவை உதவி தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதியை வழங்கிவருகிறது.

100 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை உதவி நிதி வழங்கப்படுகிறது.

இதுவரையில் 2,000க்கும் அதிகமான மாணவர்கள், மொத்தம் 200,000 வெள்ளிக்கு மேற்பட்ட உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு முதல் தமிழர் பேரவை, சிண்டா, சிங்கப்பூர் இந்தியக் கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கல்வி உதவி நிதியை வழங்கிவருகிறது.

உதவி தேவைப்படும் மாணவர்கள், தொடர்ந்து படித்து வாழ்க்கையில் முன்னேற ஊக்கமளிப்பதே இதன் நோக்கம் என அமைப்புகள் கூறுகின்றன.

(படங்கள்: திருச்செல்வி)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்