Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்துக்கு இவ்வாண்டு மேம்பட்ட ஆண்டாக இருந்தது - அமைச்சர் காவ்

பொதுப் போக்குவரத்துக்கு இவ்வாண்டு மேம்பட்ட ஆண்டாக இருந்ததாய்ச் சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பொதுப் போக்குவரத்துக்கு இவ்வாண்டு மேம்பட்ட ஆண்டாக இருந்தது - அமைச்சர் காவ்

படம்: Channel NewsAsia

பொதுப் போக்குவரத்துக்கு இவ்வாண்டு மேம்பட்ட ஆண்டாக இருந்ததாய்ச் சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரயில் நம்பகத்தன்மை மேம்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அதற்கு ஒரு காரணம் SMRT குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியோ கியான் என்றார் அவர்.

அவரை 'நல்ல தலைவர்' என்று திரு. காவ் வருணித்தார். கிழக்கு-மேற்கு ரயில் பாதையைத் தவிர மற்ற ரயில் பாதைகள் இவ்வாண்டு நம்பகத்தன்மை இலக்கை விஞ்சும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் கிழக்கு-மேற்கு ரயில் பாதை, மறு-சமிக்ஞைச் சோதனை காரணமாக பாதிக்கப்பட்டது.

5 நிமிடங்களுக்கு மேற்பட்ட சேவைத் தடையை எதிர்நோக்கும் முன்னர் ரயில்கள் சராசரியாக 400,000 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும் என இவ்வாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் திரு.காவ் நினைவுகூர்ந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்