Images
  • 21 yEAR oLD cHARGED
    (படம்: TODAY/Raj Nadarajan)

கத்தியால் ஆடவரின் முகத்தை வெட்டியதாக 21 வயது இளையர்மீது குற்றச்சாட்டு


ஆடவர் ஒருவரின் முகத்தைக் கத்தியால் வெட்டியதாக 21 வயது வோங் கியான் ஹோங் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். Orchid ஹோட்டலுக்கு வெளியே இம்மாதம் 3ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.

31 வயது திரு.போ சே ஹோங் முகத்தின் இடப்பக்கத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

சுயநினைவோடு அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வோங் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு கடுமையான காயத்தை விளைவித்த குற்றத்துக்கு அவருக்குப் பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படலாம்.


 

Top