Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரீனா பே சேண்ட்சில் நடைக்கேற்ப நடனமாடும் ஒளியமைப்பு

மரீனா பே சேண்ட்சில் கண்கவர் விளக்குக் கண்காட்சி அம்சம் ஒன்று நிரந்தரமாகச் சேர்க்கப்படும். Digital Light Canvas என்பது அந்த ஒளிச் சிற்பத்தின் பெயர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மரீனா பே சேண்ட்சில் கண்கவர் விளக்குக் கண்காட்சி அம்சம் இன்று நிரந்தரமாகச் சேர்க்கப்படவிருக்கிறது. Digital Light Canvas என்பது அந்த ஒளிச் சிற்பத்தின் பெயர்.

400ஆயிரத்துக்கும் அதிகமான LED விளக்குகளைக் கொண்டு 14 மீட்டர் உயர ஒளி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் அது தொங்கவிடப்பட்டுள்ளது.
கீழே 15 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட LED விளக்குகளாலான தரை.
teamLab என்ற ஜப்பானியக் கலை அமைப்பின் கைவண்ணம் அது.

தரையில் நடந்துசெல்வோர் எடுத்துவைக்கும் அடிகளுக்கு ஏற்ப விளக்கின் நிறங்கள் மாறுகின்றன.

5 வெள்ளி கட்டணம் செலுத்தினால் நீங்களும் திறன் காட்டலாம்.

ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நண்பகல் மணி 12 இலிருந்து இரவு மணி 8 வரை அனுமதி உண்டு.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, பொது விடுமுறைக்கு முந்தைய நாட்கள் ஆகியவற்றில், நண்பகல் மணி 12 முதல் இரவு மணி 9 வரை அது திறந்திருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்