Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

74 வயது ஆடவர் உட்பட, மோசடிச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 251 பேரிடம் விசாரணை

மோசடிச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
74 வயது ஆடவர் உட்பட, மோசடிச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 251 பேரிடம் விசாரணை

கோப்புப்படம்

மோசடிச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையும், வரத்தக விவகாரப் பிரிவும் மேற்கொண்ட இரு வார அமலாக்க நடவடிக்கைகளில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 15 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.

அவர்கள் இணையக் காதல் மோசடிகள், இணைய வர்த்தக மோசடிகள், கடன் மோசடிகள் போன்றவற்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள், மற்றவர்களை ஏமாற்றிய குற்றத்திற்காகவோ கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவோ விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.

மோசடிகள் வழி, சுமார் 3.5 மில்லியன் வெள்ளி இழப்பு நேரிட்டதாகக் காவல்துறை கூறியது.

மற்றவர்களை மோசடி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 500,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்