Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் பங்கை வலியுறுத்தும் கண்காட்சி

சாதாரண வீட்டுப் பொருட்களைக் கொண்டு செய்து பார்க்கப்படும் உயிரியல் சோதனைகள்.

வாசிப்புநேரம் -

சாதாரண வீட்டுப் பொருட்களைக் கொண்டு செய்து பார்க்கப்படும் உயிரியல் சோதனைகள்.

தகவல், தொழில்நுட்ப நிபுணர்களின் கைவண்ணத்தில் உருவான சிக்கலான ஒப்படைப்புகள். 

Maker Faire Singapore கண்காட்சியில் இவ்வாண்டு அத்தகைய 600 படைப்புகள் காட்சிக்கு உள்ளன. 

முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை அது.

சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.

இன்றும் நாளையும் சுமார் 20,000 பேரைக் கண்காட்சி ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார் தொடர்பு, தகவல் அமைச்சர் டாக்டர் யாக்கோப் இப்ராஹிம்.

அனைத்துத் தரப்பையும் சேர்ந்த மக்கள் கண்காட்சிக்கு வருவர்;

குறிப்பாக இளையர்களிடையே புத்தாக்கம் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கண்காட்சி அமையும் என்று டாக்டர் யாக்கோப் கூறினார். 

புத்தாக்க அறிவைக் கொண்டு புதுப்புதுப் படைப்புகளை உருவாக்குவதை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்வதற்கு இளையர்கள் முன்வர கண்காட்சி உதவும் என்றார் அவர். 

புதிதாக ஒன்றை உருவாக்குவது குறித்த மனப்போக்கை, இளமையிலேயே பெற்றிருக்க ஊக்குவிக்கும் முக்கிய முயற்சி இது என்றும் அமைச்சர் சொன்னார். 

ஒரு வலுவான பொருளியலாகவும், அறிவுத் திறன் மிக்க நாடாகவும் வளர்வதில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் வேளையில் மக்கள் புத்தாக்கத்தை நாடுவது அவசியமாகிறது என்றார் அவர். 

சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் அது பயன்தரும் என்றார் டாக்டர் யாக்கோப். 

அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் பங்கை வலியுறுத்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது Maker Faire Singapore கண்காட்சி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்