Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மகாத்மா காந்தி நினைவாலயம் சிங்கப்பூரில் எங்கு, எப்போது கட்டப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

லிட்டில் இந்தியாவின் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி நினைவாலய மண்டபம். 1953ஆம் ஆண்டு இன்றைய தினம் திறக்கப்பட்ட மண்டபம், 2009ஆம் ஆண்டு சுமார் 1 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

25 ஏப்ரல் 1953

லிட்டில் இந்தியாவின் ரேஸ் கோர்ஸ் லேனில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி நினைவாலய மண்டபம். 

முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவாலயத்தின் அடிக்கல்லை நாட்டினார். அவர் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட வருகையின் போது 1950ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதியன்று அந்த நிகழ்வு இடம்பெற்றது.

1953ஆம் ஆண்டு இன்றைய தினம் திறக்கப்பட்ட மண்டபம், 2009ஆம் ஆண்டு சுமார் 1 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டது.

அலுவலகங்கள், வகுப்பறைகள், பன்னோக்கு மண்டபம், நூலகம் போன்ற வசதிகள் அங்கு உள்ளன.

அதன் நூலகத்தை மறுசீரமைக்க தேசிய நூலக வாரியம் கைகொடுத்தது. காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் பணிகளையும் எடுத்துக்கூறும் தமிழ், ஆங்கில, ஹிந்தி, சீன மொழிப் புத்தகங்கள் அங்கு உள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்