Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'மேலும் நியாயமான சிங்கப்பூரை மீண்டும் உருவாக்குவோம்' என்ற கருப்பொருளுடன் சீர்திருத்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை

6 மாதம் வரை வேலையிழந்தோருக்கு அனுகூலங்கள், மூத்தோருக்கு மாதாந்தரத் தொகை,தேசிய சேவை செய்தோருக்கு இலவச பல்கலைக்கழகக் கல்வி, வேலை அனுமதிக்கான சம்பள உச்சவரம்பை அதிகரிப்பது ஆகியவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

வாசிப்புநேரம் -
'மேலும் நியாயமான சிங்கப்பூரை மீண்டும் உருவாக்குவோம்' என்ற கருப்பொருளுடன் சீர்திருத்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை

(படம்:Ili Nadhirah Mansor/TODAY)

மேலும் நியாயமான சிங்கப்பூரை மீண்டும் உருவாக்குவோம் என்ற கருப்பொருளுடன் சீர்திருத்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் எதிர்பாரா உலகப் பொருளியல் நெருக்க்டி, சுகாதாரச் சூழலுக்கு இடையே சிக்கியிருப்பதாகத் தொட்ங்கியது கட்சியின் தேர்தல் அறிக்கை.

சிங்கப்பூர் அரசாங்கம் மிகப்பெரிய தொகையை மக்களுக்காகச் செலவிடுகிறது, சிங்கப்பூரர்களின் வேலை, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கிறது என்பதைக் குறைகூறவில்லை...ஆனால் அது போதாது என்கிறோம் என்று கட்சி கூறியது.

மேலும் கொள்கைரீதியாகக் கொண்டுவர விரும்பும் சில மாற்றங்களைக் கட்சி பட்டியலிட்டது.

பொருள் சேவை வரி ஏற்றத்தை தற்காலிகமாக நிறுத்துவது, 6 மாதம் வரை வேலையிழந்தோருக்கு அனுகூலங்கள், மூத்தோருக்கு மாதாந்தரத் தொகை, பிள்ளைகள் நலனுக்காக வசதி குறைந்தோருக்கு உதவி, தேசிய சேவை செய்தோருக்கு இலவச பல்கலைக்கழகக் கல்வி, குறைந்தபட்ச ஊதியம், வேலை அனுமதிக்கான சம்பள உச்சவரம்பை அதிகரிப்பது ஆகியவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

இவற்றின் மூலம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் மேலும் நியாயமான ஒரு சமுதாயத்தை உருவாக்க விழைவதாகக் கட்சி சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்