Images
உடற்குறையுள்ளோருக்கான சமூகச் சேவை நிலையங்கள், இல்லங்களில் சுமார் 3,300 பேருக்குக் கிருமிப் பரிசோதனை
உடற்குறையுள்ளோருக்கான சமூகச் சேவை நிலையங்கள், இல்லங்கள் போன்றவற்றில் இருக்கும் சுமார் 3,300 பேரிடம் கிருமித்தொற்றுக்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தமது Facebook பதிவில் அதனைத் தெரிவித்தார்.
அதிரடித் திட்டத்திற்குப் பிந்திய இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின்போது, சிங்கப்பூர் சமூக அளவில் மேற்கொள்ளும் விரிவான சோதனைத் திட்டத்தின் ஓர் அங்கம் அது என்றார் அவர்.
சிறப்புத் தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையங்களும் அவற்றில் அடங்கும்.
முதியோர் பராமரிப்பு நிலைய ஊழியர்களிடமும் அங்கு வசிப்போரிடமும் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
அடுத்த மாதத்திலிருந்து, மூத்தோருக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை கிருமித்தொற்றுச் சோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.