Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலியான விலையுயர்ந்த பொருள்களை விற்ற சந்தேகத்தின்பேரில் 3 பெண்கள் கைது

போலியான சொகுசுப் பொருள்கள், ஆடைகளை விற்ற சந்தேகத்தின்பேரில் மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
போலியான விலையுயர்ந்த பொருள்களை விற்ற சந்தேகத்தின்பேரில் 3 பெண்கள் கைது

படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

போலியான சொகுசுப் பொருள்கள், ஆடைகளை விற்ற சந்தேகத்தின்பேரில் மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

26இலிருந்து 47 வயதிற்குட்பட்ட அந்தப் பெண்கள் கேலாங் ரோட் ஓரமாக உள்ள City Plaza கடைத்தொகுதியில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 28,000 வெள்ளி மொத்த மதிப்புள்ள 370 பொருள்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலியான வணிக முத்திரை கொண்ட பொருள்களை விற்பது, விநியோகம் செய்வது ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 100,000 வெள்ளி அபராதமும் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்