Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

3 வயதுச் சிறுமியின் காதுப் பகுதியில் சிராய்ப்பு, வீக்கம் - காவல்துறையினர் விசாரணை

பாலர் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 3 வயது மகளைப் பார்த்து அதிர்ந்து போயினர் பெற்றோர். சிறுமியின் வலப்புறக் காதின் மேல் பகுதி சிவந்து வீங்கிக் காணப்பட்டது.

வாசிப்புநேரம் -
3 வயதுச் சிறுமியின் காதுப் பகுதியில் சிராய்ப்பு, வீக்கம் - காவல்துறையினர் விசாரணை

படம்: Facebook / Claudia Kwan

பாலர் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 3 வயது மகளைப் பார்த்து அதிர்ந்து போயினர் பெற்றோர். சிறுமியின் வலப்புறக் காதின் மேல் பகுதி சிவந்து வீங்கிக் காணப்பட்டது.

காதில் காணப்படும் சிராய்ப்புக் காயத்துக்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிறுமி அழுதிருக்கிறார்.

பள்ளியை அழைத்து விசாரித்தபோது அங்கிருந்த ஆசிரியர்கள் யாரும் அதற்கான விளக்கத்தைக் கொடுக்கமுன்வரவில்லை.

பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற தாய், அது யாரோ ஒருவர் வேண்டுமென்றே காதைப் பிடித்து இழுத்ததால் ஏற்பட்ட வீக்கம் என்று தெரிந்துகொண்டார்.

அது ஒரு விபத்தால் ஏற்பட்ட காயமில்லை என்பதை மற்றொரு குழந்தைநல மருத்துவரும் உறுதி செய்தார். உடனே காவல்துறையிடம் அதுபற்றிப் புகார்செய்தார் தாயார்.

பிள்ளை சமாதனமடைந்ததும் விசாரித்தபோது, குறிப்பிட்ட எந்த ஆசிரியர் தன்னைக் கிள்ளினார் என்பதைப் பெயரோடு கூறியிருக்கிறார்.

மேலும் சம்பவம் நடந்த மூன்று வாரங்களாகக் குழந்தை நடுராத்திரியில் எழுந்து வலிக்கிறது, வேண்டாம், மன்னித்து விடுங்கள், என்று அலறுவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளையைப் பார்க்க மனம் வருந்துவதாகவும் அந்தத் தாய் கூறியுள்ளார். காவல்துறையினர் அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்