Images
  • mp
    ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங். படம்: Facebook / Tan Wu Meng

நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங் தாக்கப்பட்ட சம்பவம் - 32 வயது ஆடவர் கைது

ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங் தாக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். வேண்டுமென்றே நாடாளுமன்ற உறுப்பினருக்குக் காயம் ஏற்படுத்தியதற்காக அவர் விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் புளோக் 334 கிளமெண்டி அவென்யூ 2-இல் நடந்தது.

நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங் தாக்கப்பட்டதில் இலேசாகக் காயமடைந்தார்.

நாளை அந்த ஆடவரின் மீது குற்றம் சுமத்தப்படும்.


Top