Images
  • cb market
    படம்: Google Street View

சிங்கப்பூரில் உள்ள 35 சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் கிருமித்தொற்றுப் பாதிப்பு

சிங்கப்பூரில் உள்ள 35 சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த இடங்கள் அனைத்தும் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் குழுமத்துடன் தொடர்புடையவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

- ஆமோய் ஸ்ட்ரீட் (Amoy Street) உணவு நிலையம்
- அங் மோ கியோ சென்ட்ரல் சந்தை, உணவங்காடி நிலையம்,
- Teban Garden சந்தை,
- தியோங் பாரு சந்தை,
- தேக்கா நிலையம்

உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மூன்று பேருக்கும் குறைவானவர்களுக்கே கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சொங் பூன் (Chong Boon), ஹோங் லிம் (Hong Lim), ஹேக் ரோட் (Haig Road), சொங் பாங் (Chong Pang) ஆகிய இடங்களில் உள்ள சந்தை, உணவங்காடி நிலையங்கள் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் குழுமத்துடன் தொடர்புடையவை என்று தெரியவந்துள்ளது.

ஹேக் ரோட் (Haig Road) சந்தை உணவங்காடி நிலையத்துடன் தொடர்புடைய 25 பேருக்கும், சொங் பாங் (Chong Pang) சந்தையுடன் தொடர்புடைய 10 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்ப்பரவலை முறியடிப்பதற்காகவும், முழுமையாக கிருமி நீக்கம் செய்யவும் இன்று முதல் அடுத்த மாதம் நான்காம் தேதி வரை அந்த உணவங்காடி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

சென்ற மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை சொங் பூன் (Chong Boon), சந்தைக்குச் சென்று திரும்பியவர்கள் இலவசமாகப் பரிசோதனை செய்து கொள்ளவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

Top