Images
  • sg labour
    AFP/Roslan Rahman

வேலையிடப் பாகுபாடு குறித்து ஆண்டுதோறும் சராசரியாக 379 புகார்கள் பதிவு

சிங்கப்பூரில் வேலையிடப் பாகுபாடு குறித்து ஆண்டுதோறும் சராசரியாக 379 புகார்கள் கிடைக்கப்பெறுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) தெரிவித்துள்ளார்.

அது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் டான் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

2014 இலிருந்து இவ்வாண்டு முற்பாதி வரை சராசரியாக 379 புகார்கள் கிடைத்தன. அவற்றில்,
மூன்றில் ஒரு பங்கு புகார்களில் பாகுபாடு காட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

சராசரியாக 121 புகார்கள் மனிதவள அமைச்சுக்கு அனுப்பப்பட்டன.

41 முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் டான் சொன்னார்.

அவற்றுள் பெரும்பாலானவை, குடியுரிமை, வயது, பாலினம், இனம், மொழி ஆகிய பாகுபாடு தொடர்பானவை என்று அவர் கூறினார்.

பதிவான எஞ்சிய புகார்களில் பெரும்பாலானவை, தவறான புரிதல் தொடர்பானவை என்று கூறப்பட்டது.

புகார்களில் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டதாக அமைச்சர் டான் சொன்னார். 

Top