Images
  • Singapore covid-19
    படம்: Gaya Chandramohan

சிங்கப்பூரில் இதுவரை 39,000 பேரிடம் COVID-19 கிருமித்தொற்றுக்கான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சர்

சிங்கப்பூரில் இதுவரை 39,000 பேரிடம் COVID-19 கிருமித்தொற்றுக்கான மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

சுமார் 200,000 சிங்கப்பூர்வாசிகள் விரைவில் நாடு திருப்பவுள்ளதால் சிங்கப்பூரில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் ஒரு மில்லியன் பேருக்கு, 6,800 பேரிடம் மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அது தென் கொரியா, தைவானைவிட அதிகம்.

மருத்துவச் சோதனைகள் மூலம் பாதிக்கப்படும் பல பேர் ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் காணப்படுவதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி 558 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


Top