Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19ஆல் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் வீடு திரும்பினர்; புதிதாக இருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது

சிங்கப்பூரில் மேலும் நால்வர் COVID-19 கிருமித்தொற்றுக்கான சிகிச்சையில் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
COVID-19ஆல் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் வீடு திரும்பினர்; புதிதாக இருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது

(படம்: Jeremy Long/ CNA)

சிங்கப்பூரில் மேலும் நால்வர் COVID-19 கிருமித்தொற்றுக்கான சிகிச்சையில் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சிங்கப்பூர் ஆயுதப் படை வீரரும், தனியார் மருத்துவமனை மருத்துவரும் அவர்களில் அடங்குவர்.

அந்த நால்வரையும் சேர்த்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 62.

இன்னும் 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஏழு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இவ்வேளையில், புதிதாக இருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆனது.

புதிதாக பாதிக்கப்பட்ட இருவரும் அண்மையில் சீனா செல்லாத சிங்கப்பூரர்கள்.

அவர்களில் ஒருவர் 47 வயது ஆடவர்; அவர் செங்காங் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றவர் 38 வயது ஆடவர். அவர் Ng Teng Fong பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்