Images
  • 4000 Flats
    (படம்: HDB)

கூடுதல் வீட்டு மானியம், வருமான உச்ச வரம்புடன் 4,000 புதிய வீடுகள்


வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இன்று 4,000க்கும் அதிகமான புதிய வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது.

 அதிக வீட்டு மானியத்தாலும் உயர்த்தப்பட்ட வருமான உச்ச வரம்பாலும் வீடு வாங்குவோர் அதிகம் பயனடைவர்.

இத்தகைய வீட்டு விற்பனைத் திட்டம் இடம்பெறுவது இது முதல் முறை.

இதற்குமுன் பொங்கோல், தெம்பனீஸ் வட்டாரங்களில் சுமார் 3,400 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் விற்பனைக்கு வந்தன.

இதற்குமுன் நடந்த விற்பனைத் திட்டத்தில் விற்கப்படாமல் எஞ்சியிருந்த சுமார் 700 வீடுகள் மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய வீடுகளை வாங்குவதற்கான வருமான உச்ச வரம்பு 12 ஆயிரம் வெள்ளியிலிருந்து 14,000 வெள்ளிக்கு உயர்த்தப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வாங் நேற்று அறிவித்தார்.

மணமுடிக்காத 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வருமான உச்ச வரம்பு 6 ஆயிரம் வெள்ளியிலிருந்து 7,000 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்முறையாக வீடு வாங்குவோர் அதற்கான மானியங்களைப் பெறுவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. 

Top