Images
  • 41 gold medals SG (1)
    (படம்: Powerlifting Singapore)

2018 ஆசிய பளு தூக்குதல் போட்டி - சிங்கப்பூருக்கு 41 தங்கப் பதக்கங்கள்

இவ்வாண்டின் ஆசிய பளு தூக்குதல் போட்டியில் சிங்கப்பூர் சாதனை படைத்துள்ளது.

Powerlifting எனப்படும் பளு தூக்குதல் நின்றுகொண்டும், உட்கார்ந்துகொண்டும் அதிக எடையைத் தூக்கும் விளையாட்டு.

சிங்கப்பூர் அதில் 41 தங்கப் பதக்கங்களை வென்றது.


18 நாடுகளிலிருந்து 253 விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பெண் வீரர்கள் ஐவரும், ஆண் வீரர்கள் 12 பேரும் பங்கெடுத்தனர்.

சிங்கப்பூர் 10 வெள்ளி பதக்கங்களும் 5 வெண்கல பதக்கங்களும் வென்றது.

சிங்கப்பூர் 6 ஆசியச் சாதனைகளை முறியடித்துள்ளது.  

Top