Images
  • budget (1)

மக்களுக்கும் தொழில்களுக்கும் ஆதரவளிக்கக் கூடுதலாக $48 பில்லியன் நிதி


சிங்கப்பூர், மக்களுக்கும் தொழில்களுக்கும் ஆதரவளிக்கக், கூடுதலாக 48 பில்லியன் வெள்ளியைச் செலவிடவிருக்கிறது.

COVID - 19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

கடந்த மாத வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தொகையுடன் சேர்த்து மொத்தமாக அரசாங்கம் 55 பில்லியன் வெள்ளியைச் செலவிடவிருக்கிறது.

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு. ஹெங் சுவீ கியெட், மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வேலைகளைப் பாதுகாத்தல், ஊழியர்களுக்கு ஆதரவளித்தல், வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவை அத்திட்டத்தின் நோக்கம்.

ஊழியர்களின் சம்பளச் செலவுக்குக் கூடுதல் நிதியாதரவு, விருப்பத்துக்கு ஏற்ப வேலை செய்வோருக்கான ரொக்க வழங்குதொகை ஆகியவை அவற்றில் அடங்கும்.

குடும்பங்களுக்கும், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் அனுகூலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரொக்கப் புழக்கம், கடன் உள்ளிட்ட உடனடிச் சவால்களை நிறுவனங்கள் எதிர்கொள்ள திட்டம் உதவும்.

அதன் ஒருபகுதியாக, நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட சொத்து வரிக் கழிவுகளைப் பெறும்.

நெருக்கடி நிலையிலிருந்து சிங்கப்பூர் வலிமையுடன் மீண்டுவர அரசாங்கம் நீண்டகால வளர்ச்சியில் முதலீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

Top