Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'அரசாங்க அமைப்புகள், ஒரே மாதிரியான தவறுகள் மீண்டும், நிகழ்வதைத் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்'

அரசாங்க அமைப்புகளின் கணக்குத் தணிக்கையில் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சில குறைபாடுகள் முன்னைய ஆண்டுகளிலும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
'அரசாங்க அமைப்புகள், ஒரே மாதிரியான தவறுகள் மீண்டும், நிகழ்வதைத் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்'

(கோப்புப் படம்: Hani Amin/ CNA)

அரசாங்க அமைப்புகளின் கணக்குத் தணிக்கையில் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சில குறைபாடுகள் முன்னைய ஆண்டுகளிலும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் இல்லாதது,
கொள்முதல், குத்தகை நிர்வாகம் தொடர்பான கவனக் குறைபாடுகள்,
சமுதாய மானியத் திட்டங்களின் நிர்வாகத்தில் பிழைகள் ஆகியவை அந்தக் குறைபாடுகள்.

பொதுக்கணக்காய்வுக் குழு, சென்ற நிதியாண்டுக்கான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையைப் பரிசீலனை செய்ததில் அது தெரியவந்தது.

தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் தொடர்பில் போதிய கண்காணிப்பு இல்லாததைக் குழு கண்டறிந்தது.

குறிப்பாக சிறு நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு நிர்வாகம் போன்றவை தொடர்பில் அதிகக் கவனம் தேவை என்று குழு கருதுகிறது.

அரசாங்க அமைப்புகள், ஒரே மாதிரியான தவறுகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதைத் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் அரசாங்க நிதி, வளங்களின் நிர்வாகத்தை அவை வலுவிழக்கச் செய்யும் என்று குழு கவலை தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்