Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இருமல், காய்ச்சல், தொண்டைப் புண் உள்ளவர்களுக்கு 5 நாள் மருத்துவ விடுப்பு

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இருமல், காய்ச்சல், தொண்டைப் புண் உள்ளவர்களுக்கு 5 நாள் மருத்துவ விடுப்பு அளிக்கச் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
இருமல், காய்ச்சல், தொண்டைப் புண் உள்ளவர்களுக்கு 5 நாள் மருத்துவ விடுப்பு

படம்: Tan Si Hui

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இருமல், காய்ச்சல், தொண்டைப் புண் உள்ளவர்களுக்கு 5 நாள் மருத்துவ விடுப்பு அளிக்கச் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உடல்நலம் சரியில்லை என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவரைச் சந்தித்து, வீட்டிலிருந்து ஓய்வெடுப்பது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களும், நிறுவனங்களும் மருத்துவ விடுப்பு தொடர்பில் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.

5 நாள்களில் உடல்நிலை சரியாகாவிட்டால் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படுவர்.

உடல்நலமில்லாதோர் பொது இடங்களையும், கூட்ட நெரிசலையும் தவிர்க்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டது.

சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் தென்படும் பெரும்பாலார் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளாவதில்லை; இருப்பினும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது சிறந்தது என்று அமைச்சு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்