Images
  • ninaivil nindrathu

சிங்கப்பூரில் முதல் அனைத்துலக நெடுந்தொலைவோட்டம்

05 டிசம்பர் 1982

விளையாட்டுகளில் எல்லோரும் பங்கெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் 1982ஆம் ஆண்டு இன்றைய தினம் சிங்கப்பூரில் முதன்முறையாக மிகப் பெரிய அளவிலான அனைத்துலக நெடுந்தொலைவோட்டம் நடைபெற்றது.

நெடுந்தொலைவோட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், கனடா, சுவீடன் போன்ற நாடுகளைச் சேர்ந்த உலகின் சிறந்த 30 அனைத்துலக வீரர்கள் கலந்துகொண்டனர்.

காலை 7 மணிக்கு ஸ்டாம்ஃபர்ட் ரோட் சந்திப்பில் தொடங்கிய நெடுந்தொலைவோட்டத்தில் 2,300க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர்.

ஈஸ்ட் கோஸ்ட் ரோடு, கேலாங் ரோடு, அங் மோ கியோ, ஆர்ச்சர்ட் என்று பல வட்டாரங்களை உள்ளடக்கியிருந்தது 42.2 கிலோமீட்டர் ஓட்டப் பாதை. ஓட்டம் இறுதியாக தேசிய விளையாட்டரங்கத்தில் முடிந்தது.


Top